இமைக்காநொடிகள் படத்தில் விஜய்சேதுபதி நடித்தது ஏன்?
டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இப்போது இயக்கியிருக்கும் படம் இமைக்கா நொடிகள்.
நயன்தாரா, அதர்வா, ராக்ஷிகண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, இந்தப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது.
அவர் நடித்ததற்கான காரணம், இந்தப்படத்தின் கதைதான் என்கிறார்கள்.
ஒரு கொலை நடக்கிறது, பெண் அதிகாரியின் கணவர்தான் கொலையாகும் நபர். அந்தக்கொலையைச் செய்தவர் யார்? என்று தேடிப்போகிறார் பெண் அதிகாரி அப்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படத்தின் மையக்கதை என்கிறார்கள்.
அந்த மையக்கதையில் கொலைசெய்யப்படும் நபராக விஜய்சேதுபதி நடித்திருக்கிறாராம்.
மொத்தக்கதையையும் நகர்த்தும் புள்ளியாக அந்த வேடம் இருக்கிறது. அதில் நீங்கள் நடித்தால் அந்த வேடத்தின் மதிப்பு உயரும் அது படத்துக்குப் பலமாக அமையும் என்று இயக்குநர் கேட்டுக்கொண்டதால் அந்த வேடத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.











