மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி
உதயநிதிஸ்டாலின் இப்போது சீனுராமசாமி இயக்கியிருக்கும் கண்ணே கலைமானே படத்தில் நடித்திருக்கிறார்.
அப்படத்தைத் தொடர்ந்து அவர் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன், அட்லியிடம் பணியாற்றிய ஈனோக் ஆகியோருடைய இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது உதயநிதி புதிய கூட்டணி அமைத்திருக்கிறாராம்.
துப்பறிவாளன் படத்துக்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் உதயநிதிதான் நாயகன் என்கிறார்கள்.
மிஷ்கின் சொன்ன கதை உதயநிதிக்குப் பொருத்தமாக இருந்ததாம். எனவே அவர் படத்தில் நடிப்பது என்று முடிவாகிவிட்டதாம்.
ஊட்டி சென்று படத்தின் திரைக்கதை எழுதும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறாராம் மிஷ்கின். அந்த வேலை முடிந்ததும் படம் பற்றிய அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
இன்னொரு முக்கியமான விசயம், இந்தப்படத்துக்கு இசை இளையராஜா.











