சினிமா செய்திகள்

தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா ரிலீஸ் தேதி இதுதான்

கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கின்றன.

படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது.

பொருளாதாரச் சிக்கல் காரணமாக பட வெளியீட்டில் தாமதம் நேர்ந்தது.

செப்டம்பர் 6 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.ஆனால் கடைசி நேரத்தில் அப்படம் வெளியாகவில்லை.

அதுகுறித்து,

செப்டம்பர் 6 அன்று வெளியாகவிருந்த எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெரு முயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கும் இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருந்துகிறோம். .மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக்கொண்டிருகிறோம்

என்று படத்தின் தயாரிப்பாளர் மதன் கூறியிருந்தார்.

இப்போது எல்லாச் சிக்கல்களும் முடிவடைந்துவிட்டனவாம். அதனால் நவம்பர் 29 ஆம் தேதி படம் வெளியாகுமென்று சொல்கிறார்கள்.

இம்முறை படம் நிச்சயம் வெளியாகும் என்றும் ரசிகர்கள் இதைக் கொண்டாடத் தயாராகலாம் என்றும் சொல்கிறார்கள்

Related Posts