சினிமா செய்திகள்

அஜீத்தின் அடுத்த பட இயக்குநர் ஏ.எல்.விஜய் ?

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கடுத்து அஜீத் நடிக்கவிருக்கும் படம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

ஆனால் அஜீத் நடிக்கும் அடுத்த படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் குறித்து பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

அடுத்த அஜீத் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறதெனவும், கோகுலம் ஸ்டுடியோ தயாரிக்கவிருக்கிறதெனவும், மீண்டும் போனிகபூர் தயாரிக்கிறார் எனவும் மாற்றி மாற்றி செய்திகள் வருகின்றன.

அதேபோல அஜீத்தின் அடுத்த பட இயக்குநர் பற்றியும் பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இப்போது திரையுலகில் உலா வரும் தகவல்படி அஜீத்தின் அடுத்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அவர் இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி தலைவி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அந்த வேலைகள் முடிவடைந்தவுடன் அஜீத் பட வேலைகள் என்று சொல்லப்படுகிறது.

ஏ.எல்.விஜய் ஏற்கெனவே அஜீத் நடித்த கிரீடம் படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts