இரண்டாண்டுகளுக்குப் பிறகு விட்ட இடத்தைப் பிடித்த சன் டிவி
தமிழ்த் தொலைக்காட்சிகளில் சன் தொலைக்காட்சி எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஜிஆர்பி எண்ணிக்கை அடிப்படையில் 1100,1150 என்கிற எண்களைப் பெற்று வந்தது.அத்தொலைக்காட்சியின் அதிக எண்ணிக்கை 1700,1800 என்று இருந்தது. அதுதான் படிப்படியாகக் குறைந்து 1100 என்கிற அளவில் இருந்தது.
இப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். இப்போது எடுக்கப்பட்ட கணக்குகள் படி சன் தொலைக்காட்சி, தமிழகம் புதுச்சேரி அளவில் 1557 ஜிஆர்பியும் சென்னை அளவில் 1936 ஜிஆர்பியும் பெற்றிருக்கிறது.
கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பின் இந்த நிலையை சன் தொலைக்காட்சி எட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல் இந்த ஊரடங்கு காலத்தில் கே தொலைக்காட்சியும் பல மடங்கு முன்னேறி 684 ஜிஆர்பி பெற்றுள்ளது.
நான்காவது ஐந்தாவது இடங்களில் இருந்த சன்நியூஸ் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் இருப்பது பாலிமர்.
பாடல்களை மட்டும் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளிலும் சன் மியூசிக் முதலிடத்தில் இருக்கிறது.
இவை தவிர இந்திய அளவிலேயே அதிகம் பேரால் பார்க்கப்படும் தனியார் தொலைக்காட்சி என்கிற பெருமையும் சன் தொலைக்காட்சிக்குக் கிடைத்திருக்கிறதாம்.முதலிடத்தில் இருப்பது அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன்.












