கமல் ரஜினி இணையும் படத்தை இன்பநிதி தயாரிக்கிறார் – பரபர புதியதகவல்
லோகேஷ் கனகராஜ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.அடுத்து அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
அந்தப்படம் முடிவடைந்த பிறகு,கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது அதில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.லோகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கைதி 2 முன்பாக இன்னொரு படத்தை இயக்கவிருக்கிறார் என்பதுதான் அந்த மாற்றம் என்கிறார்கள்.
அந்தப்படத்தில் கமல், ரஜினி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம்.இருவரும் இணைந்து நடிப்பதற்கேற்ற ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் சொன்னதாகவும் அதை இருவரும் ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, தான் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி ரஜினியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார் கமல்.அந்தச் சந்திப்பு அதற்காக மட்டுமல்ல இந்தப்படத்தை உறுதி செய்வதற்காகவும்தான் என்று சொல்கிறார்கள்.
அதன்பின், நடிகர் கார்த்தி மற்றும் கமல் சந்திப்பும் நடந்தது.அப்போது கைதி 2 படத்துக்கு முன்பாக இந்தப்படத்தை எடுப்பது தொடர்பாக அவரிடம் சொல்லி அவருடைய சம்மதத்தையும் பெற்றதாகச் சொல்கிறார்கள்.
திரையுலகம்,திரைப்பட இரசிகர்கள் ஆகிய அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கவிருக்கும் இந்தப்படத்தை,ரெட்ஜெயண்ட் நிறுவனமும்,கமலின் ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருக்கிறதாம்.
விக்ரம் படத்துக்கு முன்னதாகவே லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது என்றொரு தகவல் உலா வந்தது.ஆனால் சில காரணங்களால் அப்போது அந்தப்படம் நடக்கவில்லை.
அதேபோல், ஜெயிலர் 2 படத்துக்கு அடுத்து நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில ரஜினி நடிக்கவிருக்கிறார் என்றொரு செய்தியும் வந்தது.
ஆனால், நித்திலன் சொன்ன திரைக்கதை ரஜினிக்குப் பிடிக்கவில்லையாம். அதனால் அந்தப்படம் தடைபட்டிருந்தது.
இவ்விரண்டையும் இணைத்து ஒரே படமாக மாற்றிவிட்டார்கள்.
இந்நிலையில், இதில் இன்னொரு சிறப்புச் செய்தியும் இருக்கிறது.
அது?
உதயநிதியின் மகன் இன்பநிதி, ரெட்ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கிறாராம்.
அவர் பொறுப்பேற்ற உடனேயே கமல், ரஜினி, லோகேஷ ஆகியோர் இணையும் படத்தை அறிவிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அப்படி நடக்கும் பட்சத்தில் பொதுவெளியில் இன்பநிதியின் அறிமுகமும் பெரிதாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
பெரிதினும் பெரிது கேள் என்பதை இன்பநிதி சரியாகச் செய்து அறிமுகமாகிறார் என்கிறார்கள்.
வாழ்த்துகள். வாழ்க! வளர்க!











