செய்திகள் நடிகர்

அஜீத்தின் விசுவாசம் படத்தின் நாயகி இவர்தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வீரம்,வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படத்துக்கு ‘விசுவாசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை  சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

2017 நவம்பர் மாதம், தயாரிப்பாளர் டி.தியாகராஜன்,   தங்களது அடுத்த தயாரிப்பு இதுவென்றும் படத்தின் பெயரையும் அறிவித்தார்.

2018 ஜனவரி மாதம் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று  சொல்லி இருந்தார்கள். 2018 தீபாவளி வெளியீடாக ‘விசுவாசம்’ வெளிவரும்” என்றும் அப்போதே தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. இப்போது படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts