சினிமா செய்திகள்

பொன்ராம் சசிகுமார் படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் இதுதான்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன்,சீமராஜா ஆகிய படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர் பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாகிறார்.

இந்தப் படத்தில் மூத்த நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ரஜினிமுருகன் படத்தில், பொன்ராம் இயக்கத்தில் நடித்திருந்த ராஜ்கிரண், இந்தப் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தைத் தயாரிக்கப்போவது யார்? என்பது தெரியாமல் இருந்தது. இப்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது.

சென்னையில் பிரபலமான திரையரங்க வளாகம் சத்யம் சினிமாஸ். இந்நிறுவனத்தை பிவிஆர் நிறுவனம் வாங்கிவிட்டது. இப்போது அதன் நிர்வாகத்தை மட்டும் கவனித்துக்கொண்டிருக்கிறது சத்யம்சினிமாஸ் நிறுவனம்.

அந்நிறுவனம் இனிமேல் திரைப்படங்கள் தயாரிக்கவிருக்கிறதாம்.
தற்போது அவர்கள் தயாரிக்கும் முதல் படமாக பொன்ராம் சசிகுமார் இணையும் படம் உருவாகவிருக்கிறதாம்.

இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்.

Related Posts