September 21, 2026
சினிமா செய்திகள்

முதன்முறை சேர்ந்து நடிக்கும் கார்த்தி ஜோதிகா – சூர்யா வாழ்த்து

கமல் கெளதமி நடித்த’பாபநாசம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் தமிழ்ப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 27) தொடங்கப்பட்டுள்ளது.

இதில், கார்த்தியுடன் ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இப்படம் தொடங்கிய நிலையில் இது குறித்து கருத்தும் தெரிவித்துள்ள கார்த்தி,இப்படத்தில், முதன்முறை அண்ணியுடன் சேர்ந்து நடிப்பது த்ரில்லாக இருக்கிறது என்று கார்த்தி சொல்லியிருக்கிறார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில்,
இந்தப்படம் மிகவும் சிறப்பானதாக அமையும், ஜோவையும் உன்னையும் சேர்ந்து திரையில் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள் என்று சூர்யா சொல்லியிருக்கிறார்.

Related Posts