சினிமா செய்திகள் நடிகர்

அதர்வா படத்துக்கு சிக்கல்

அதர்வா தயாரித்து நடித்திருக்கும்
செம போத ஆகாத படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

அதற்கடுத்த அவர் நடித்திருக்கும் இமைக்கா நொடிகள் பட வேலைகளும் முடிவடைந்துவிட்டனவாம்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதர்வா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ஒத்தைக்கு ஒத்தை.

இந்தப்படம் பாதியளவு படப்பிடிப்பு நடந்ததோடு நிற்கிறதாம்.

அதர்வா படங்களுக்கு வியாபாரம் இல்லை என்பது மட்டுமின்றி எதிர்பார்ப்பும் இல்லை என்று சொல்லி அந்தப் படத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறாராம்.

இந்தப்படத்தை நிறுத்தி வைத்துவிட்டு ஜீ.வி.பிரகாஷை வைத்து ஒரு படத்தைத் தொடங்கி அதை எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

அவர் எடுக்கும் ஜீ.வி.பிரகாஷ் படம் வெற்றியடைய வேண்டும் அல்லது அதர்வாவின் சொந்தப்படம் வெற்றியடைய வேண்டும்.

இவ்விரண்டில் ஏதாவதொன்று நடந்தால்தான் ஒத்தைக்கு ஒத்தை படம் தொடர்ந்து நடக்கும் இல்லையென்றால் சிக்கல்தான் என்கிறார்கள்.

Related Posts