சினிமா செய்திகள் நடிகர்

முதன்முறையாக இருமொழிப் படத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது பொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தை முடித்திருக்கிறார். அந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

இந்தப்படத்தைத் தொடர்ந்து இதே நிறுவனத்தின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்கும் அந்தப்படத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ரகுல்பிரித்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இதுவரை இல்லாத புதிதாக,சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் முதன்முறையாக, இன்று தொடங்கும்போதே தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படத்தை எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு நல்ல வசூலைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts