விஜய் 66 படமே தொடங்கவில்லை அதற்குள் முடிவான விஜய் 67 – விவரங்கள்
விஜய் இப்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கும் அந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். அந்தப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று சொல்லப்படவில்லை.
ஆனால், அதற்குள் விஜய்யின் 67 ஆவது படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கி வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கவிருக்கிறாராம். அப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
மாஸ்டர் படப்பிடிப்பின்போதே விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருந்தாராம்.அந்தக்கதை விஜய்க்குப் பிடித்ததால் அதையே படமாக்க ஒப்புக்கொண்டாராம்.
விஜய் 66 ஆவது படத்தை முடித்துவிட்டு வருவதற்குள் லோகேஷ் கனகராஜ் கமல், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கும் விக்ரம் படத்தை முடித்துவிட்டு வருவாராம்.











