பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு நடந்தவிதம் – வருத்தத்தில் நடிகர்கள்
பிப்ரவரி 3 அன்று சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியிருந்தது.
பிப்ரவரி 2 இரவில் தொடங்கிய விருந்து நிகழ்ச்சி 3 ஆம் தேதி விடியும்வரை நடந்திருக்கிறது.
யுவன்ஷங்கர்ராஜா, தனுஷ், ஜெயம்ரவி, ஆர்யா, சரத்குமார்,ராதிகா, மகத் மற்றும் பிக்பாஸ் குழு உள்ளிட்டு ஏராளமானோர் அவ்விருந்து நிகழ்வில் பங்கு பெற்றனர்.
இரவு பத்து மணியளவில் பெரும்பாலானோர் கூடிவிட்டாலும் 11.50 மணிக்கு வந்தாராம் சிம்பு. பனிரெண்டு மணி அடிக்கும்போது கேக் வெட்டியிருக்கிறார்.
அப்போது எடுத்த காணொலியை யுவன்ஷங்கர்ராஜா வெளியிட்டிருந்தார்.
சுமார் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்த சிம்பு, மீண்டும் அறைக்குச் சென்றுவிட்டாராம்.
இதனால் சரத், ராதிகா உள்ளிட்ட பலரும் கோபமாகிவிட்டார்களாம். நம்மை வரச்சொல்லிவிட்டு இவர் வெளியே போய்விட்டாரே என்று பலரும் வருத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் கடைசிவரை சிம்பு விருந்து நடந்த அரங்குக்கு வரவேயில்லை என்கிறார்கள்.
அதனால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் தவிர மற்றவர்கள் உடனே கிளம்பிப் போய்விட்டனராம்.
சுமார் 25 இலட்சம் செலவு செய்து பிறந்தநாள் விருந்து நடத்திய சிம்பு, அங்கு கூட சரியான நேரத்துக்கு வரவில்லை, விருந்தினர்களைச் சரியாக உபசரிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கே சரியான நேரத்துக்கு வராத சிம்புவை படப்பிடிப்புக்குச் சரியான நேரத்துக்கு வருவதில்லை என்று புகார் சொல்லக்கூடாது.











