September 21, 2026
சினிமா செய்திகள்

வெளிவருமுன்பே இலாபம் – கலகலப்பு 2 பற்றி ஒரு கலகல கணக்கு

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாகவுள்ள  படம் ‘கலகலப்பு 2’.

2012-ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.

‘கலகலப்பு 2’-வில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் திரசா நடித்துள்ளனர்.

வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். நடிகை நந்திதா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளாராம்.

அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பூ தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார், யு.கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதல்பாகம் பெரிய வெற்றி பெற்றதால்  இரண்டாம்பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இப்படம் பற்றிய ஒரு உத்தேசக்கணக்கு. திரையுலகம் பற்றி எல்லோரும் பயந்துகொண்டிருக்கும் நேரத்தில் இக்கணக்கு அனைவருக்கும் தெம்பூட்டுவதாக உள்ளது.

சுந்தர்.சி இந்த்ப்படத்தை, அவருடைய சம்பளம் இல்லாமல் சுமார் ஆறேகால் கோடியில் முடித்துவிட்டாராம். விளம்பரம் உட்பட மற்ற செலவுகள் இரண்டுகோடி இருக்கலாம் என்கிறார்கள்.

படத்தை தமிழக அளவில் திரையிட உரிமை பெற்றவர்கள் சுமார் பத்தரை கோடிக்கு வாங்கியிருக்கிறார்களாம். தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை 5.30 கோடி என்று சொல்லப்படுகிறது.

இந்தக்கண்க்கின்படி படம் வெளிவரும் போதே இலாபத்தில் இருக்கிறதாம்.

சுந்தர்.சியின் திட்டமிடல்தான் இதைச் சாத்தியமாக்குகிறது.

எல்லோரும் இப்படிச் செய்தால் திரையுலகம் நன்றாக இருக்கும்.

 

Related Posts