சினிமா செய்திகள்

காலா படம் பார்த்து அதிர்ந்த அமீர்கான். ஏன்?

காலா படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நானாபடேகர் தன் சிறந்த நடிப்பின் மூலம் படத்துக்குப் பலம் சேர்த்தார்.

படத்துக்குப் பலம் மட்டுமல்ல படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்துகுப் பலமாக அமைந்திருக்கிறது.

இப்படம் பற்றி நடிகர் அமீர்கானிடம் சொல்லியிருக்கிறார் நானாபடேகர்.

உடனே படத்தைப் பார்த்த அமீர்கான், அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.

சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இவ்வளவு அரசியல் கருத்துகளைப் பேசிய இயக்குநரின் துணிச்சல் வியப்பளிக்கிறது. அவரை நான் பார்க்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அதன்பின் மும்பை சென்ற பா.இரஞ்சித் அமீர்கானைச் சந்தித்திருக்கிறார்.

அவரை அன்போடு வரவேற்று உபசரித்து மிகவும் பாராட்டிப் பேசினாராம் அமீர்கான்.

இதனால் பா.இரஞ்சித் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறாராம்.

Related Posts