சர்கார் இசைவிழாவில் ரசிகர்களுக்குப் புதியவிருந்து
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. வழக்கமாக விஜய் படத்தின் பாடல்கள் வெளியானால் மிகுந்த வரவேற்பைப் பெறும். ஆனால், இந்தப்படத்தின் பாடல்களுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கலந்தே வந்திருக்கின்றன.
இந்நிலையில் அப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று நடக்கிறது.
இதையொட்டி படத்தின் ஐந்து பாடல்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது படக்குழு.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழின் பாரம்பரிய இசையையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் பற்றிய காணொலியை வெளியிடுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
ஆகவே விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி இசைரசிகர்களுக்கும் இன்று கொண்டாட்டம்தான்.












