நான் முதலமைச்சரானால் நடிக்கமாட்டேன் – சர்கார் விழாவில் விஜய் பரபரப்புப் பேச்சு
விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா இன்று நடந்தது.
விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன், ஏ.ஆர.ரகுமான், ஏ.ஆர.முருகதாஸ், கீர்ததிசுரேஷ், வரலட்சுமிசரத்குமார், ராதாரவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பாடல்களை புதுமையான முறையில் பாடல்களை வெளியிட்டனர்.
விழாவின் இறுதியில் பேசிய நடிகர் விஜய்,
என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பர் நண்பிகளுக்கு வணக்கம். என் படங்கள் வெற்றியடையும்போது ஏற்படும் சந்தோசம் உங்களைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.
இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் கிடைத்தது சர்காருக்கு ஆஸ்கார் கிடைத்த மாதிரி.
மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்தது. அரசியல்ல மெர்சல் பண்ணியிருக்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
கலைக்கு அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் சின்னத்திரையில்ல் தனி சர்கார் நடத்தும் கலாநிதிமாறன்.
வெற்றிக்காக எவ்வளவு வேணா உழைக்கலாம். ஆனா நாம் வெற்றியடையக் கூடாதென்று பல பேர் உழைக்கிறாங்க.
உசுப்பேத்தறவங்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். இதை எல்லோரும் கடைபிடிங்க.
எல்லாரும் அரசியல்ல இறங்கி சர்கார் அமைப்பாங்க நாங்க சர்கார் அமைச்சுட்டு அப்புறமாக வர்றோம். இந்த சர்கார் பிடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க.
நான் முதலமைச்சரானால் நடிக்கமாட்டேன் உண்மையாக இருப்பேன்.
ஒரு கட்சியில் தலைவன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.











