இயக்குநருடன் கருத்து வேறுபாடு – சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு

சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்துக்கு முன்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையவில்லை.ஏ.ஆர்.முருகதாஸ் இந்திப்படம் இயக்கப் போய்விட்டதால் அப்படம் தடைபட்டிருக்கிறது.
இவ்விரு படத்துக்கும் இடையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது.அப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் சொல்லப்பட்டது.
முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்தப்படம்தான் தொடங்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.ஆனால் எதிர்பாராதவிதமாக பராசக்தி பட வாய்ப்பு வந்ததால் அப்படத்துக்கு சிவகார்த்திகேயன் போய்விட்டார் என்று சொன்னார்கள்.
ஆனால்,சிபிச்சக்ரவர்த்தியுடன் சிவகார்த்திகேயனுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதென்றும் அதனால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டார் என்றொரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.
முதல்படம் பெரிய வெற்றி என்பதால் இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தியின் நடவடிக்கை முற்றிலும் மாறிவிட்டதாம்.அதை சிவகார்த்திகேயனிடமும் காட்டியதால் அவர் கோபமாகிவிட்டார் என்கிறார்கள்.
டான் படத்தைத் தொடர்ந்து ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போதும் இயக்குநரின் நடவடிக்கையால் ரஜினிகாந்த் அவரை நிராகரித்துவிட்டார்.அதேபோல் இப்போதும் நடந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இயக்குநருக்கும் கதாநாயகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அதைச் சரிசெய்ய தயாரிப்பு நிறுவனம் சார்பில் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லையாம்.
அதனால்,உங்கள் நிறுவனத்தில் படம் நடிக்கிறேன் ஆனால் சிபிச்சக்ரவர்த்தி இயக்குநராக இருக்கக் கூடாது என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.
அதனால், அந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்கெனவே பணியாற்றியுள்ள இயக்குநர் அகமதுவிடம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.அவரும் சொல்லியிருக்கிறார்.அக்கதையில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கும் சம்மதம் என்று சொல்கிறார்கள்.
இதனால் அகமது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகிவிட்டதென்கிறார்கள்.
இயக்குநர் அகமது இந்நிறுவனத்துக்காக ஜெயம்ரவியை வைத்து ஜனகனமண என்றொரு படத்தைத் தொடங்கினார்.அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும் நின்றுவிட்டது.அது பெரிய செல்வு பிடிக்கும் படம் என்பதால் அப்படத்தை அப்படியே விட்டுவிட்டு இறைவன் படத்தை எடுத்தனர்.
அப்படத்தைத் தொடர்ந்து ஜன கன மண படம் மீண்டும் தொடங்கும் என்று சொல்லப்பட்டது.ஆனால் அது குறித்த எந்தத் தகவலும் இல்லை.
இப்போது அந்தக் கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? அல்லது அவருக்காகப் புதிய கதையை எழுதியிருக்கிறாரா? என்கிற விவரம் போகப்போகத் தெரியும்.
ஆனால், சிவகார்த்திகேயனின் 24 ஆவது படத்தை அகமது இயக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதியாம்.
நடக்கட்டும்.