நயன்தாரா பெயர் முதலிலா? கொதித்த அதர்வா கோபத்தில் தயாரிப்பாளர்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா அதர்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் இமைக்கா நொடிகள்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா ஜூன் 27 அன்று நடைபெற்றது.
விழாவுக்கு நயன்தாராவும் வரவில்லை, அதர்வாவும் வரவில்லை.
நயன்தாராவைப் பொறுத்தவரை, படத்தில் ஒப்பந்தம் ஆகும்போதே படத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்று சொல்லிவிடுகிறாராம். அதனால் அவர் வரவில்லை.
அதர்வா ஏன் வரவில்லை?
இந்தப்படத்தை அதர்வாவை வைத்துத்தான் முதலில் தொடங்கினார்கள். அதன்பின் அதர்வாவின் அக்கா வேடத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்கள்.
அதுவரை அதர்வா படமாக இருந்தது அதன்பின் நயன்தாரா படமாக மாறிவிட்டது. பட விளம்பரங்களில் அவருக்குத்தான் முன்னுரிமை.
இது அப்படியே வளர்ந்து படத்தில் இடம்பெறும் நடிகர்கள் பெயர்ப் பட்டியலில் அதர்வாவுக்கு முன்னதாக நயன்தாரா பெயரைப் போட்டுவிட்டார்களாம்.
இதனால் அதர்வா கொதித்துப் போய்விட்டாராம். நயன்தாராதான் முக்கியம் என்றால் அவரை வைத்தே எல்லாம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி இசைவெளியீட்டு விழாவுக்கு வர மறுத்துவிட்டாராம்.
இனிவரும் விளம்பரங்களில் உங்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்று சொல்லியும் அதர்வா இறங்கிவரவில்லையாம். இதனால் அதர்வா மீது தயாரிப்பாளர் கடுங்கோபம் கொண்டாராம்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இசை வெளியீட்டுவிழாவை நிறுத்த முடியாது என்பதால், அதர்வா இல்லாமலே நடத்திவிட்டார்கள்.
அதன்பின் இன்றைய நாளேடு விளம்பரங்களில் அதர்வா மட்டும் இருக்கிறார்.











