சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ் முதல்பார்வை – இரசிகர்கள் கொண்டாட்டம்

சந்தானம் நடிப்பில் கே.ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஏஒன்.

இப்படம் சந்தானம் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. 

இதனால் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

கொரோனாவுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொரொனாவுக்குப் பின்னர் தொடங்கியது.
நாயகியாக அனைகா நடிக்கிறார்.

வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவரும் இந்தப்படத்தை கே.குமார் தயாரித்துவருகிறார்.

படத்துக்கு இசையமைப்பவர் சந்தோஷ் நாராயணன்.ஆர்தர்வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்று இந்தப்படத்தின் முதல்பார்வையும் பெயரும் அறிவிக்கப்பட்டது.

படத்தின் பெயர் பாரிஸ் ஜெயராஜ். 

இந்தப்படத்தில் கானா பாடகராக நடிக்கிறார் சந்தானம். அதனால் இசைக்குப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

இந்தப்பெயரையும் முதல்பார்வையையும் சந்தானம் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

Related Posts