சினிமா செய்திகள்

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழாக்கத்துக்கு இந்தப்பெயரா?

கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படமாக்கும் உரிமையை இயக்குநர் ஆர்.கண்ணன் வாங்கினார்.

ஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப் பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது? கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள்? என்பதே இப்படத்தின் கதை.

இந்த வேடத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இவரது ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். ‘மாஸ்கோவின் காவேரி’ படம் மூலம் சமந்தாவுடன் அறிமுகமான இவர் பின்பு ‘வணக்கம் சென்னை’, யூ- டர்ன்’ மற்றும் பல படங்களில் நடித்தார்.

அதே வேளையில் ‘அந்தாள ராட்சசி’ படம் மூலம் தெலுங்கிலும் நாயகனாக அறிமுகமாகி பிரபலமானார் . தெலுங்கில் இயக்குனராகவும் இருந்து வருகிறார்.

இந்தப்படம் மூலம் மீண்டும் தமிழ் – தெலுங்கு மொழிகளில் நடிக்கிறார்.

பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தின் மொத்தப்படப்பிடிப்பையும் சுமார் இருபது நாட்களுக்குள் முடித்துவிட்டார்களாம்.

இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்படவேண்டியிருக்கிறதாம்.

இந்நிலையில், இந்தப்படத்துக்கு பராசக்தி என்று பெயர் வைக்க நினைத்து ஏவிஎம் நிறுவனத்தை அணுகி அந்தப் பெயர் வைக்கும் உரிமையைக் கேட்டார்களாம்.

ஆனால், அந்தப்பெயரைத் தர அவர்கள் மறுத்துவிட்டார்களாம்.

இதனால் வேறு பொருத்தமான பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.

Related Posts