வியாபாரம் தொடங்கியவுடனே விற்றுத் தீர்ந்த காப்பான் – படக்குழு மகிழ்ச்சி
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காப்பான்.
இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது.
அந்நிறுவனம், தமிழகமெங்கும் விநியோகஸ்தர்களுக்கு அப்படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் செய்துள்ளது.
தமிழக வியாபாரத்தைத் தொடங்கியதுமே போட்டி போட்டுக் கொண்டு வியாபாரம் நடந்துவிட்டது என்கிறார்கள்.
இருபது கோடிக்கு உரிமையைப் பெற்ற கோபுரம் பிலிம்ஸ் சுமார் 24 கோடிக்கு படத்தை வியாபாரம் செய்துவிட்டதாம்.
அவற்றின் விவரங்கள் (உத்தேசமாக) கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது…
சென்னை சத்யம் சினிமாஸ் -3 கோடி
செங்கல்பட்டு முருகானந்தம் -5.50 கோடி
வட ஆற்காடு முருகானந்தம் -2,75 கோடி
திருச்சி முருகானந்தம் – 2.50 கோடி
சேலம் (போட்டி ) விலை – 2 கோடி
திருநெல்வேலி லட்சுமணன் – 1.25 கோடி
கோவை( போட்டி) விலை – 4 கோடி
ம்துரை கோபுரம் பிலிம்ஸ் – 3 கோடி
இவற்றில் சிற்சில மாறுதல்கள் இருக்கலாம் என்றாலும் எல்லாப்பகுதிகளிலும் படத்தை வாங்கக் கடும் போட்டி இருந்தது என்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












