சினிமா செய்திகள்

ஹர்பஜன்சிங் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் பட முதல்பார்வையால் சர்ச்சை

மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த டில்லிபாபு தயாரிக்கும் புதியபடம் பேச்சிலர்.

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்குகிறார். 

இந்தப்படத்தின் முதல்பார்வையை, கிரிக்கெட் விரர் ஹர்பஜன்சிங் வெளியிட்டுள்ளார்.

தமிழில் ட்வீட் செய்து தமிழக ரசிகர்களிடையே தமிழ்ப்புலவர் என்று பெயர் பெற்றிருக்கும் ஹர்பஜன்சிங்,
கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்… கமிட் ஆனா உம்முனு இருக்கனும்… Bachelorனா ஜம்முனு இருக்கலாம்… ! #Bachelor First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்!  

என்கிற வாழ்த்துச் செய்தியுடன் படத்தின் முதல்பார்வையை இன்று மாலை (செப்டம்பர் 11) 7 மணிக்கு வெளியிட்டுள்ளார்.

முதன்முறையாக ஹர்பஜன்சிங் ஒரு திரைப்படத்தின் முதல்பார்வையை வெளியிட்டுள்ளார் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்தப்படம்.

அதேசமயம், முதல்பார்வை புகைப்படம் குறித்து கடும் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

கேவலமா இருக்கு..இதுக்கு நீங்க விளக்கு புடிக்கமா இருந்துருக்கலாம் புலவரே.. 

என்பது உட்பட ஏராளமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  

Related Posts