சினிமா செய்திகள்

இவர் கதாநாயகனா? பயப்படாதீர்கள் – ராபின்ஹூட் படக்குழு உறுதி

நான்கடவுள் ராஜேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் படம் ராபின் ஹூட். இவர் கதாநாயகனா? என்று பயப்படத்தேவையில்லை, படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். ஏனெனில் கதைக்களம் அப்படி. அதற்கு மிகப்பொருத்தமாக ராஜேந்திரன் இருப்பார் என்றும் சொல்கிறார்கள்.

கார்த்திக் பழனியப்பன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில்,அம்முஅபிராமி, சதீஷ்,முல்லை,ஆர்.என்.ஆர்.மனோகர்,சங்கிலிமுருகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை லூமியர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு இக்பால் ஆஸ்மி, இசை ஸ்ரீநாத்விஜய் பாடல்கள் கபிலன்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

அதிலிருந்து இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Related Posts