சினிமா செய்திகள்

தர்பார் இரண்டாம் பார்வை வெளியானது – ரசிகர்கள் உற்சாகம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில்,காவல்துறை அதிகாரியாகவும் தாதாவாகவும் இரட்டை வேடத்தில் ரஜினி நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் படம் தொடங்கும்போதே, தர்பார் என்ற தலைப்புடன் முதல்பார்வையை வெளியிட்டுவிட்டு படப்பிடிப்பைத் தொடங்கினர்.

அதன்பின்,படப்பிடிப்பில் இருந்து ரஜினியின் பல புகைப்படங்கள் கசிந்து கொண்டே இருந்தன. இதனால் படக்குழு இரண்டு நல்ல புகைப்படங்களை வெளியிட்டது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் இரண்டாம் பார்வையை இன்று மாலை ஆறு மணிக்கு லைக்கா நிறுவனம் வெளியிட்டது.

தர்பார் திரைப்படம்,2020 ஜனவரி 14 ஆம் தேதி, பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக அதைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts