நள்ளிரவு முதல் ஒளிபரப்பு – வால்டர் படக்குழு அறிவிப்பு
புதுமுக இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் சிபிராஜ், நட்டி, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருந்த படம் வால்டர்.
பிரபுதிலக் தயாரிப்பில் உருவான இந்தப்படம் மார்ச் 13 ஆம் நாள் வெளியானது.
ஒரு சமுதாயக் கருத்தை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கொரோனா சிக்கல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தின் ஓட்டம் தடைபட்டது.
மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணையதள ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை சன் நிறுவனம் பெற்றிருந்தது.
இந்நிலையில், ஜூன் 22 ஆம் தேதி தங்களுடைய சன் நெக்ஸ்ட் செயலியில் இப்படத்தை ஒளிபரப்பவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜூன் 22 முதல் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்ற நள்ளிரவு 12 மணி முதல் படத்தைப் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.











