தணிக்கைக் குழுவின் பாராட்டைப் பெற்ற சிறகு – படக்குழு மகிழ்ச்சி
ஃபர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டிரேவதி எழுதி இயக்கியிருக்கும் படம் சிறகு.
மெட்ராஸ், கபாலி, வடசென்னை, சண்டைக்கோழி-2, ஆகிய படங்களில் நடித்து மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஹரி, இந்தப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
அக்ஷிதா எனும் புதுமுகம் நாயகியாக நடித்திருக்கிறார்.
இவர்களோடு, நிவாஸ் ஆதித்தன், டாக்டர் வித்யா, காளிவெங்கட் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு அரோல் கொரேலி இசை அமைத்துள்ளார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு அருண்குமார் வி. எஸ்.
படத்தின் பெயரைக் கேட்கும்போதே மனம் இளகும். அத்ற்கேற்ப இசையும் பயணமும் கொண்டதாக இப்படம் அமைந்திருக்கிறதாம்.
ஏ.ஆர்.ரகுமான் மணிரத்னம், மகிழ்திருமேனி, மாரி செல்வராஜ் ஆகியோரின் பாராட்டைப் பெற்ற இப்படம், தணிக்கைக் குழுவினராலும் பாராட்டப்பட்டிருக்கிறது.
இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் , க்ளீன் யூ சான்றிதழ் வழங்கியதோடு படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
இதனால் தயாரிப்பாளர் மாலாமணியன் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.











