விஜய் பிறந்தநாள் – மாஸ்டர் தயாரிப்பாளர் செய்த வேலை
இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.இந்நாளில் விஜய் தற்போது நடித்து வரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார், நாளேடுகளில் விஜய் பிறந்தநாளையொட்டி விளம்பரம் கொடுத்திருக்கிறார்.
அண்மைக்காலங்களில் ஒரு நடிகரின் பிறந்தநாளுக்கு தமிழகம் முழுக்க விளம்பரம் வந்திருப்பது இப்போதுதான் என்கிறார்கள்.

vijay bday poster
மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வாழ்த்தில்,மாஸ்டர் கண்டிப்பாக ஒரு மறக்க முடியாத நினைவுதான். அதில் ஒரே ஒரு நாளை என்னால் தேர்ந்தெடுக்க முடியாது. உங்களுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணத்தையும் நினைத்து சந்தோஷப்படுவேன் அண்ணா. இதைச் சாத்தியமாக்கியதற்கு நன்றி. பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் அண்ணா. லவ் யூ.
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் லலித்குமாரின் விளம்பரம் மற்றும் இயக்குநர் லோகேஷின் வாழ்த்து ஆகியன அதிகமாகப் பகிரப்பட்டுவருகின்றன.













