January 13, 2025
சினிமா செய்திகள்

காஞ்சனா இந்திப்படத்தின் பெயர் மற்றும் நாயகன் – அறிவித்தார் லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும்,நாயகியாக ராய் லட்சுமியும் நடித்திருந்தனர்.

இவர்களுடன் கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இந்தப் படத்தின் 3 ஆவது பாகம் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் காஞ்சனா முதல்பாகம் படத்தின் இந்தி மொழிமாற்று எடுத்துக்கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

இந்திப்பதிப்புக்கு லக்‌ஷ்மி பாம்ப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். அவருடன் கியாரா அத்வானி ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்தத் தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

Related Posts