2005 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஆர்யா. ஒரு சில படங்களிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டார். அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து படங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. இளம்பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பது அவருக்குப் பலம். திரையுலகிலும் பல நடிகைகளுடன் அவர் நட்பாக இருக்கிறார்
சன்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா உட்பட பலர் நடித்திருக்கும் படம் கஜினிகாந்த். ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படம் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயகுமார் கூறியதாவது… என் முந்தைய படங்களைப் பார்த்துவிட்டு குடும்பத்தோடு பார்க்கிற படங்கள் எடுங்கள் என்று சொன்னார்கள். இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் ரசித்துப் பார்க்கிற மாதிரி இருக்கும்.













