காதலில் விழுந்தார் ஆர்யா விரைவில் திருமணம்?
2005 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ஆர்யா. ஒரு சில படங்களிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டார்.
அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து படங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கிறது.
இளம்பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பது அவருக்குப் பலம். திரையுலகிலும் பல நடிகைகளுடன் அவர் நட்பாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
கொஞ்ச காலம் நயன்தாராவின் காதலர் என்றும் சொல்லப்பட்டவர்.
ஆனால் அவையெல்லாம் வெறும் வதந்திகள் என்றாகிப்போயின.
இப்போது உண்மையிலேயே அவர் காதலில் விழுந்திருக்கிறார் என்றும் அது விரைவில் திருமணம் வரை போகவிருக்கிறது என்று திரையுலகில் சொல்லப்படுகிறது.
அவருடைய காதலி நடிகை சாயிஷாதான் என்கிறார்கள்.
கஜினிகாந்த் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தபோது காதல் உண்டானதாம்.
இப்போது சூர்யாவின் காப்பான் படத்தில், சாயிஷா நாயகியாகவும் ஆர்யா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்
இந்த படப்பிடிப்புத்தளத்திலும் இவர்கள் காதல் வளர்ந்துகொண்டிருக்கிறதாம்.
இருவரும் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள். விரைவில் இருவரும் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிற இநத விசயம் செய்தியாகப் போகிறதா? அல்லது வழக்கம் போல் வதந்தியாகிவிடுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.











