சினிமா செய்திகள்

கலைப்புலி தாணுவுக்கு இன்னொரு படம் – தனுஷ் முடிவு

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.

இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இதைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தையும் கலைப்புலி தாணுவே தயாரிக்கிறார்.

இவ்விரு படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கவிருக்கும் இன்னொரு படத்தையும் கலைப்புலிதாணு தயாரிக்கிறாராம்.

அப்படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கவிருக்கிறார்.

ஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படங்கள் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டிருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இவற்றோடு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டு படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படங்களை துரைசெந்தில்குமார் மற்றும் முண்டாசுப்பட்டி ராம்குமார் ஆகியோர் இயக்குகிறார்கள்.

Related Posts