சினிமா செய்திகள்

பிரபல நடிகை காலமானார் – திரையுலகம் கண்ணீர்

பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயநிர்மலா.இவர் தமிழ் தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 200 படங்களில் நடித்தவர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு ஹைதராபாத் காண்டினென்ட்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயநிர்மலா மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 73.

நடிப்பு மட்டுமின்றி 44 படங்களை இயக்கியவரான விஜயநிர்மலா, இதன் மூலம் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

தெலுங்கில் பிரபலமாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை மணந்து கொண்டார்.

விஜயநிர்மலாவுக்கு ஒரு மகன். பெயர் நரேஷ். நரேஷூம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார்.

தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் வந்தீர்கள், வரலாற்றை உருவாக்கியது, அங்கு யாரும் வரமுடியாத அளவிற்கு அருகில் வரமுடியாது, இப்போது நீங்கள் எங்களை விட்டுவிட்டீர்கள் … வில் மிஸ் யு நன்னி, ரெஸ்ட் இன் பீஸ் … வலிமை குடும்பம், நண்பர், வெல்விஷர்கள் மற்றும் ரசிகர்களுக்கு… விஜய நிர்மலா காரு உங்கள் திரைப்படங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Posts