சினிமா செய்திகள்

சிம்பு நடிக்கும் புதியபடம் கவுதம்கார்த்திக்கும் இணைகிறார்

சிம்பு நடிப்பில் மாநாடு என்றொரு படம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

அதுதவிர ஹன்சிகா நடிக்கும் மகா என்கிற படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு நடிக்கும் புதிய படமொன்றின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சிம்புவை அந்நிறுவனம் தயாரிக்கும் முதல்படம் இது.

சிம்பு 45 என்றழைக்கப்படும் இந்தப்படத்துக்கு மத்ன்கார்க்கி வசனம் எழுதுகிறார்.

பெரும் செலவில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படம் கன்னடத்தில் 2017 இல் வெளியான முஃப்தி என்கிற படத்தின் மொழிமாற்று என்கிறார்கள்.

அங்கு சிவராஜ்குமார் ஸ்ரீமுரளி ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.

Related Posts