நரகாசூரன் படத்துக்கு விடிவுகாலம் பிறந்தது
2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நரகாசூரன்’.
இப்படத்தில் அரவிந்த்சாமி, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
2018 ஆகஸ்ட் 31 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது என்று அறிவித்தனர்.
ஆனால் சொன்னபடி படம் வெளியாகவில்லை என்பது மட்டுமின்றி, அப்பட வெளியீடு தொடர்பாக இயக்குநர் கவுதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
அது எந்த முடிவையும் எட்டாமல் அப்படியே கிடந்தது.
இப்போது அப்படத்துக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறதாம்.அப்படத்தை விரைவில் வெளியிடும் வகையில் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறதாம்.
படவெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.











