ஓவியா பெயர் சொல்லி மோசடி – உடனே விளக்கமளித்த ஓவியா
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நவம்பர் 24 ,2018 அன்று இசைத்திருவிழா நடக்கவிருக்கிறது.
அவ்விழாவில் தமிழகத்திலிருந்து பிக்பாஸ்2 புகழ் பாடகி ரம்யா, சக்திஶ்ரீகோபாலன், பாடகர் அந்தோணிதாசன், நடிகை ரம்யாநம்பீசன் உள்ளிட்ட பலரோடு நடிகை ஓவியாவும் கலந்து கொள்வதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

சமூக வலை தளங்களில் பரவிய அந்த விளம்பரத்தைப் பார்த்த நடிகை ஓவியா, நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, இந்நிகழ்ச்சி தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை. எனவே யாரும் ஏமாறவேண்டாம் என்று ட்வீட் செய்துள்ளார்.
அவரிடம் ஒப்புதல் பெறாமலே இப்படி ஒரு விளம்பரத்தைச் செய்யத் துணிந்தது எப்படி என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
அவ்விளம்பரத்தில் மற்றவர்களும் கலந்துகொள்கிறார்களா அல்லது அவையும் பொய்யா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.











