சினிமா செய்திகள் நடிகர்

அடுத்த படத்துக்காக சூர்யா அமைத்த அதிரடிக் கூட்டணி

சூர்யா இப்போது செல்வ ராகவன் இயக்கத்தில் என் ஜி கே படம் மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி கலந்து கொள்கிறார்.

இவற்றில் என்ஜிகே படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது. அடுத்து கே.வி.ஆனந்த் படம் இருக்கிறது.

இந்நிலையில் இவற்றிற்கு அடுத்து ஓர் அதிரடிக் கூட்டணியை அமைத்திருக்கிறாராம் சூர்யா.

ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

அந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.

விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts