ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், டிவிவி தானய்யா தயாரித்த படம் ‘ஆர்ஆர்ஆர்.மார்ச் 25 ஆம் தேதி இப்படம் வெளியானது.ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்கள் உட்பட எல்லா இடங்களிலும் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றது இப்படம். இப்படத்தின் இணைய
செய்திகள்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன்.இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷும் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தில் நாயகன் வில்லன் ஆகிய இரண்டு பாத்திரங்களையும் தனுஷ்
சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால்,இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல் படப்பிடிப்புக்குத் தயாராகததால் வணங்கான் படம் முடிவடைந்ததும் சிறுத்தைசிவா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்ளவிருக்கிறார்
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல்
இந்திய திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிகவும் மதிப்பு மிகுந்த விருதுகள் என்றால் அது, தேசிய திரைப்பட விருதுகள். ஆண்டுதோறும் சிறந்த நடிகர்கள், நடிகைகள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அது அவருடைய 169 ஆவது படம்.அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கடுத்து ரஜினியின் 170 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.ரஜினிகாந்த், நெல்சன் இயக்கும் படத்தை முடித்துவிட்டு வரவும், லோகேஷ்கனகராஜ், விஜய் படத்தை முடித்துவிட்டு வரவும் சரியாக இருக்கும் எனத்
விஷால் இப்போது லத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இதற்கடுத்து அவர் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. இப்படங்களுக்கு அடுத்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகவும் அப்படத்தை
சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறது. ஆம், வணங்கான் படம் முடிவடைந்ததும் சிறுத்தைசிவா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறாராம் சூர்யா. தொடக்கத்தில்
ஹன்சிகா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50 ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி அவர் பெயர் மஹா. ஸ்ரீகாந்த்,தம்பி ராமையா,கருணாகரன்,மானஸ்விகொட்டாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படத்தின் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.சிறப்புத் தோற்றம் என்று சொல்லப்பட்டாலும் சுமார் நாற்பது நிமிடங்கள் படத்தில் அவர் வருகிறாராம்.இதனால் படம்
அண்மையில் வெளியாகி இருக்கும் இரவின் நிழல் படம், பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பார்த்திபன் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் கண்ணுக்குத் தெரியாத ஆளுமையாகப் படத்தை ஆக்கிரமித்துள்ளவர் கலை இயக்குநர். அப்பணியைச் செய்துள்ளவர் விஜய் முருகன்.படம் பார்த்த திரை





















