பொன்னியின் செல்வன் உலக உரிமைகள் அறிவிப்பு – தமிழ்நாடு யாருக்கு?
விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா உட்பட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் பொன்னியின்செல்வன்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கிறது. முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வியாபார வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
இந்தப்படத்தின் தெலுங்குப் பதிப்பை தெலுங்கின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான தில்ராஜு வெளியிடவிருக்கிறார்.
கேரளாவில் இப்படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.
கர்நாடகாவில் கே.செந்தில் இப்படத்தை வெளியிடுகிறார்.
பொதுவாக தமிழ்ப்படங்களின் வெளிநாட்டு உரிமை யாராவது ஒருவரிடம் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் பிரித்துக் கொடுப்பார்கள்.
இந்தப்படத்தை லைகா நிறுவனமே ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக விற்பனை செய்திருக்கிறது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் படத்தை வெளியிடும் உரிமையை வன்சன்மூவிஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.
மலேசிய உரிமையை லோட்ட்ஸ் ஃபைவ்ஸ்டார் நிறுவனம் பெற்றிருக்கிறது.
சிங்கப்பூர் உரிமையை ஹோம் ஸ்கிரின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
அமெரிக்க உரிமையை சரிகம நிறுவனம் பெற்றிருக்கிறது.
கனடா உரிமையை கேடபிள்யூ டாக்கீஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இலண்டன் மற்றும் ஃபிரான்ஸ் உரிமை நைட் ஈடி ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது,
ஐரோப்பா உரிமையை போலின் சினிமா என்கிற நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
மிடில் ஈஸ்ட் எனப்படும் மத்தியகிழக்கு நாடுகளின் உரிமையை பார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.
ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் வெளீயிடும் உரிமை சினிஃபிளிக்ஸ் என்கிற நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
இலங்கையில் முதன்முறையாக லைகா நிறுவனம் நேரடியாக இப்படத்தை வெளியிடுகிறது.
இவை எல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை.
இன்னும் தமிழ்நாடு திரையரங்குகள் வெளியீடு யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஆனால் அதுவும் முடிவாகிவிட்டதாம்.
எல்லோரும் எதிர்பார்த்ததைப் போல தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை ரெட்ஜெயன்ட் நிறுவனத்துக்குக் கொடுக்கப்படுகிறதாம்.
நேரடியாக ரெய்ஜெயண்ட் நிறுவனத்தின் பெயரிலோ அல்லது அதன் சகோதர நிறுவனமான எம் எஸ் எம் நிறுவனத்தின் பெயரிலோ வெளியாகும் என்கிறார்கள்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறதாம்.











