விமர்சனம்

வெந்து தணிந்தது காடு – விமர்சனம்

தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து் வாழ்வாதாரம் தேடி மும்பைக்குச் செல்கிறார் சிம்பு.

அங்குபோய் ஓர் உணவு விடுதியில் வேலைக்குச் சேர்கிறார். உணவுவிடுதி வேலையைத் தாண்டி இன்னொரு இருள் உலகம் அங்கு இருக்கிறது.

அதற்குள் விருப்பமில்லாமலே நுழையும் சிம்பு அதன்பின் என்னவாகிறார்? என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் வெந்து தணிந்தது காடு.

மீசைகூட இல்லாமல் அச்சுஅசலான் தென்மாவட்ட இளைஞராக வருவது முதல் படிப்படியாவ வளர்ந்து ஒரு பெரும் ஆளுமையாக உருவெடுப்பது வரைஒவ்வொரு காட்சியிலும ஆச்சரியப்படுத்துகிறார் சிம்பு.

அதிலும் நாயகி சித்இனானியுடனான காதல் காட்சிகளில் பின்னிப்பெடலெடுத்திருக்கிறார்.பாலைவனச்சோலை போல் வரும் அக்காட்சிகள் இன்னும் கொஞ்ச நேரம் வராதா என நினைக்க வைக்கிறது.

நாயகி சித்இனானி நல்வரவு. பாத்திர வடிவமைப்பும் நன்று.

சிம்புவின் அம்மாவாக வரும் ராதிகா, வில்லன்களாக வரும்
சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் அப்புக்குட்டி, ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் நன்றாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

நடிகர்களில் நிறைய மலையாள முகங்கள் இருக்கின்றன.

சித்தார்த்தாவின் ஒளிப்பதிவு மும்பை இருண்முகத்தைக் காட்ட மெனக்கெட்டிருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை போல் அங்கங்கே பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
பின்னணி இசையிலும் தொய்வில்லை.

திரைக்கதை வசனத்தை ஜெயமோகனோடு சேர்ந்து கெளதம் மேனன் எழுதியிருக்கிறார்.

தென்மாவட்ட மக்களின் வட்டாரவழக்கை அந்த மண்மனம் மாறாமல் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.

மும்பையின் நிழலுக அடியாட்களாக தமிழர்களும் மலையாளிகளும் இருப்பது போலக் காட்டியிருப்பதும்
இவர்களுக்கு மேல் வடநாட்டினர் இருப்பதுபோல் கதை அமைந்திருப்பது தற்போதைய காலகட்டத்தைக் காட்டுகிறது.

சாகிற வரைக்கும் தலைகுனியாமல் வாழணும் என்பதாக நாயகனின் பயணம் அமைந்திருக்கிறது. இதற்குள் இரண்டகம் நிரம்பிவழிவது வாழ்க்கை மீது பயத்தை ஏற்படுத்துகிறது.

கெளதம்மேனின் அழகியலோடு ஜெயமோகனின் சிந்தனை கலந்திருப்பது பலவீனம்.

ஒரு வாழ்க்கைப்பயணம் நீரோடைபோல் ஓடும் இந்தப்படத்துக்கு சிம்புவின் நடிப்பும்துடிப்பும் பலம் சேர்த்திருக்கிறது.

தணியாமல் எரிகிறது காடு.

Related Posts