புதிய திரைப்படங்களைத் திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, மார்ச் 1-ந்தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர்.மார்ச் 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் இரத்து செய்து விட்டனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் முடங்கிக்கிடக்கிறது.
செய்திகள்
பிரிட்டன் நான்காவது தேசிய திரைப்பட விழாவில் ‘மெர்சல்’ படத்துக்கு, சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய்
கவுதம்மேனன் தயாரிப்பில் துருவங்கள் 16 புகழ் கார்த்திக்நரேன் இயக்கும ‘நரகாசூரன்’ படம் சம்பந்தமாக, கார்த்திக்நரேன் ஒரு ட்வீட் போட பதிலுக்கு கௌதம் மேனன் பேச விவகாரம் பரபரப்பானது. இந்நிலையில் இது பற்றி கௌதம் மேனன் ஒரு நீண்ட கடிதம் ஒன்றை டிவீட் செய்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, “நரகாசூரன் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் போட்ட டிவீட் என்னை வருத்தப்பட வைத்துவிட்டது.
துருவங்கள் 16 படமெடுத்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அவர், சிலநேரங்களில் ஒருவர்மீது நாம் வைக்கும் தவறான நம்பிக்கை, நம்மையே கொன்றுவிடும். எந்தவொரு செயலை செய்வதற்கு முன், ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். நாம் செய்யாத தவறுக்காக நம் கனவு சிதைக்கப்படுவதுதான் வாழ்நாளில் நாம் பார்க்க விரும்பாத தருணமாக இருக்கும் என்று ஒரு ட்வீட் போட்டு பரபரப்பை
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் பெரிய நட்டம் என்றும் அதனால் அப்படத்தைத் தயாரித்த நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் பெரும் சிக்கலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை 130 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இந்தப் படம் விநியோகஸ்தர்களுக்கு பெரிய
சிம்பு எதைச் செய்தாலும் அதை சமூகவலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் செக்கச்சிவந்தவானம் படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை வைத்துக்கொண்டு கொண்டாடித் தீர்த்தார்கள். அதன்பின் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள், நடனமாடிய காணொலி ஆகியன இணையதளமெங்கும் நிறைந்திருந்தன. இன்றைக்கு சிம்புவின்
இசை சம்பந்தமான தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா திடீரென இயேசு உயிர்த்தெழுதல் குறித்துப் பேசினார். இயேசு மறைந்தார், உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்தவ மதம் உள்ளது. ஆனால் உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையில்லை என்பதை ஆராய்ச்சி செய்து யூடியூபில் போடுகிறார்கள் என்று ஆவணப்படத்தை மேற்கொள் காட்டினார். மேலும், உண்மையான உயிர்த்தெழுதல் ரமண மகரிஷிக்கு
தரமான கதைக் களமும், சிறந்த பொழுது போக்கு அம்சங்களும் தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிகத் துல்லியமாக உள்வாங்கிக் கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷன்’ நிறுவனத்தின் நிறுவனரும் – நடிகருமான வி சத்தியமூர்த்தி. இவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் 7 தமிழர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில், சிறை கைதி ரவிச்சந்திரன் எழுதிய, ‘ராஜி்வ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. புத்தகத்தை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது: தமிழகம் தற்போது இக்கட்டான சூழ்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது போல் உள்ளது.
திரைப்படத்துறை சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேலைநிறுத்தக்காலத்துக்குள் பல்வேறு புதிய சிக்கல்கள் உருவாகிவிடும் போலிருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக ஒரு தனியார் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஒய்நாட் சசி ஆகியோர்























