சினிமா செய்திகள்

மனம் நொந்து மன்னிப்பு கேட்ட கார்த்திக்சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா,ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மெர்க்குரி திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் வெளியாகவில்லை. இதனால் மனம்நொந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ்.

இதுபற்றி அவர் பேசியிருப்பதன் சுருக்கம்….

மெர்க்குரி படம் உலகம் முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இருந்தாலும் என் சொந்த ஊரில் படம் வெளியாகவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

இந்திப்பதிப்பைக் கூடத் தமிழ்நாட்டில் வெளியிடமுடியாத நிலை.

தமிழகத்தில் படத்தை வெளியிடமுடியாததற்காக தமிழ்ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

விரைவில் தமிழகத்திலும் படம் வெளியாகும். அதுவரை பொறுத்திருங்கள், அதற்கு முன் தயவுசெய்து திருட்டு விசிடியில் படத்தைப் பார்த்துவிடாதீர்கள்

என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Related Posts