சினிமா செய்திகள்

அடுத்த படம் உறுதியானது – ஆனந்தத்தில் திளைக்கும் அட்லி

2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் பிகில். விஜய் நாயகனாக நடித்திருந்த இந்தப்படத்தை அட்லி இயக்கியிருந்தார்.

அப்படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் அட்லி இயக்கும் அடுத்த படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

ஏற்கெனவே விஜய் படம் முடிந்ததும் ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை இயக்கவிருக்கிறார் அட்லி என்று செய்திகள் வந்தன.

ரஜினிக்கு சொல்வதற்காக ஒரு கதை வைத்திருந்தாராம் அட்லி. இந்நிலையில் ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

உடனே ரஜினிக்கு என்று வைத்திருந்த கதையை ஷாருக்கிடம் சொன்னாராம் அட்லி. அவருக்கு அது பிடித்துவிட்டதாம். நிச்சயம் நாம் சேர்ந்து படம் செய்வோம் என்று சொல்லிவிட்டாராம் ஷாருக்.

இப்படிச் சொல்லப்பட்டாலும் இன்னொரு பக்கம் ஷாருக் படம் தாமதமாவதால் மீண்டும் விஜய் நடிக்கும் படத்தையே அட்லி இயக்கவிருக்கிறார் என்கிற பேச்சும் வந்தது.

ஆனால் இப்போது அட்லி அடுத்து ஷாருக்கான் படத்தை இயக்குவது உறுதியாகிவிட்டதென்கிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் இந்தி இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் படத்தில் ஷாருக்கான் நடிக்கவிருக்கிறாராம்.

அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அட்லி இயக்கும் படம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.இதனால் அட்லி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம்.

Related Posts