சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் பட்டியல் – சின்மயி மறுப்பு

கடந்த மூன்று ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவந்தார்.

முதல் மூன்று பாகங்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 4 ஆம் பாகம் தொடங்கும் வேலைகளைச் செய்துவருகிறதாம் விஜய் தொலைக்காட்சி.

நான்காம் பாகத்தில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.

17 நபர்கள் அடங்கிய அந்தப்பட்டியல்….

1. நடிகை சாந்தினி
2. நடிகர் சரண் சக்தி.
3. ஈஸ்வர்,ஜெயஸ்ரீ (கள்ளக்காதல் விவகாரத்தில் அடிபட்டவர்கள்)
4. நடிகர் விமல்
5. சரவணன் மீனாட்சி இர்பான்
6. ராதா ரவி
7. விசித்ரா
8. ரமேஷ் திலக்
9. ரட்சிதா
10. டிடி
11. சின்மயி
12. மீனா
13. ரம்யா பாண்டியன்
14. வித்யுலேகா ராமன்
15. சஞ்சனா சிங்
16. காமெடி நடிகர் சத்யன்
17. நடிகர் ஸ்ரீமன்

இவ்வாறு அந்தப் பட்டியலில் உள்ளது.

இந்தப்பட்டியல் உறுதியானதில்லை எனும் போதும், இதில் இடம்பெற்றுள்ள பாடகி சின்மயி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சின்மயியிடம் பேசிய பின் ஊடகவியலாளர் பிரியாகுருநாதன் போட்டிருக்கும் பதிவில், பிக் பாஸ் சீசன் 4 Housemates லிஸ்ட்னு ஒன்னு வெளியாயிருக்கு … அதில் சின்மயி பெயர் இருக்கு … இது வெறும் வதந்தி … சின்மயி அதில் பங்கேற்கமாட்டார்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts