சினிமா செய்திகள்

சிம்பு படத்துக்கு எதிராக தனுஷ் செய்த வேலை – வெளுத்து வாங்கிய வெற்றிமாறன்

இம்மாதம் அதாவது 2025 ஜூன் 15 அல்லது 16 ஆம் தேதி எஸ்டிஆர் 49 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார் சிம்பு.அந்தப்படத்துக்கு ஒரு மாதம் முன்னால் பூஜை போடப்பட்டுவிட்டது.அப்படத்தில் நாயகியாக கயாடு லோகர், நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம், இசையமைக்க சாய் அபயங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால்,எதிர்பாராவிதமாக அந்தப்படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல்.அதன் காரணமாக அவர்கள் உடனடியாக இந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியாத நிலை.அதனால் அந்தப்படத்தைத் தொடங்கமுடியாத இக்கட்டான சூழல்.

இதனால் சிம்பு என்ன செய்யப் போகிறார்? என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜூன் 15 ஆம் தேதி இரவு துபாயிலிருந்து சென்னை வந்தார் சிம்பு.

வரும்போதே நீண்டமுடியை வெட்டி புதிய தோற்றத்துடன் வந்திருக்கிறார்.நள்ளிரவு சென்னை வந்த அவர் அடுத்தநாள் அதாவது ஜூன் 16 காலை எட்டுமணிக்கெல்லாம் தொடங்கிய வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தின் விளம்பரப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டார்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடந்த அந்த விளம்பரப்படப்பிடிப்பில் 200 க்கும் மேற்பட்ட துணைநடிகர்களுடன் சிம்பு மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இப்போதைக்கு இந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் நெல்சன், தேவைப்பட்டால் படத்திலும் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

வெற்றிமாறன் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த வடசென்னைக்கு முந்தையதான ராஜன் வகையறா திரைக்கதைதான் படமாகவிருக்கிறது என்கிறார்கள்.

இந்நிலையில் இந்தப்படம் நடந்துவிடக்கூடாது என்று தனுஷ் கட்டையைப் போடுகிறாராம்.

இந்தப்படம் தொடங்குமுன்பே, நீங்கள் குபேரா ஆடியோ லாஞ்ச்சில் சொன்னது போல் வடசென்னை 2 படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு தொடங்கிவிடலாம் அதற்கு முன்பு, இந்தப்படத்தை முடித்துவிடுகிறேன் என்று தனுஷிடம் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன்.

அதற்கு அவரிடம், நல்லபடியா படம் செய்துட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் தனுஷ்.

அதனால் வெற்றிமாறனும், சிம்புவை வைத்து படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்.

எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், வெற்றிமாறனை தொடர்பு கொண்டிருக்கிறார்.தொடர்பு கொண்டு, இந்தப்படத்தை நீங்கள் தடையில்லாமல் எடுக்க நாங்கள் தடையில்லாச் சான்று கொடுக்க வேண்டுமெனில் தனுஷ் சாருக்கு இருபதுகோடி கொடுக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.

இதைக்கேட்டதும் வெற்றிமாறன் பேரரதிர்ச்சி ஆகிவிட்டாராம்.

நான் எழுதிய கதைக்காக உங்களுக்கு எதற்கு இருபது கோடி தரவேண்டும்? இது முழுக்க முழுக்க என்னால் எழுதப்பட்ட கதை.இதற்கு நீங்கள் எப்படி உரிமை கொண்டாடமுடியும்? என்று எகிறித் தள்ளிவிட்டாராம்.

அதோடு, தனுஷ் தரப்பிலிருந்து எவ்விதச் சட்டச் சிக்கலும் வந்துவிடாதபடி இந்தக் கதையில் பல மாற்றங்களைச் செய்துவிட்டாராம்.இதனால் இந்தப் படத்தில் சிம்புவின் தோற்றங்கள் அவருடைய இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிற வகையில் மிக நன்றாக அமைந்துவிட்டது என்கிறார்கள்.

இப்போது, சென்னையில் பிரமாண்ட அரங்கு ஒன்றை அமைத்து வருகிறார்கள்.விரைவில் அதில் பட அறிவிப்புக்கான காட்சிகளைப் படமாக்கவிருக்கிறார்களாம்.

அதைத் தொடர்ந்து படத்துக்கான படப்பிடிப்பு விரைவாகத் தொடங்கிவிடும் என்கிறார்கள்.

அதோடு, இந்தப்பட விசயத்தில் தனுஷ் இப்படி நடந்து கொண்டதால் இனிமேல் அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்கிற நிலைக்கும் வந்துவிட்டாராம் வெற்றிமாறன்.

இந்தத் தகவல் தெரிந்தவர்கள், தனுஷுக்கு ஏனிந்த வேண்டாத வேலை? தனக்கு தேசியவிருது வாங்கிக் கொடுத்த இயக்குநரையே பல்லைப் பிடித்துப் பதம் பார்க்கலாமா? என்று கவலைப்படுகிறார்கள்.

Related Posts