சினிமா செய்திகள்

முதலில் சொன்ன அஜித் முந்திச் சென்ற விஜய் – ஒரு சுவாரஸ்ய போட்டி

அஜித் தற்போது சிவா இயக்கும் விசுவாசம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் முடிதவுடன், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கப்போவதாகச் சொல்லப்பட்டது.

அந்தப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் வினோத் விசயத்தில் அதிரடித் திருப்பம் நடைபெற்றிருக்கிறதாம்.

வினோத்தின் கதை ஒன்று விஜய்க்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் விஜய்யைச் சந்திக்க விரும்பினாராம். விஜய்யும் ஒப்புக்கொள்ள உடனடியாகச் சந்திப்பு நடந்திருக்கிறது.

வெறும் சந்திப்பாக இல்லாமல் கதையும் சொல்லியிருக்கிறார் வினோத். அந்தக்கதை விஜய்க்குப் பிடித்துவிட்டதாம்.

எனவே, உடனே படத்தைத் தொடங்கலாம் என்று சொல்லிவிட்டாராம்.

எனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை வினோத் இயக்குவார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விஜய் பிறந்தநாளன்று வெளியிடப்படலாம் என்றும் தெரிகிறது.

அப்ப அஜித் படம்? விஜய் படத்துக்கு அடுத்து அஜித் படம் இயக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Related Posts