விஷால் படத்துக்கு நடுவே வினோத் படம் – லிங்குசாமி திடீர் முடிவு
இயக்குநர் லிங்குசாமி இப்போது விஷால் நாயகனாக நடிக்கும் சண்டக்கோழி2 படத்தை இயக்கிவருகிறார்.
இந்தப்பட வேலைகள் இன்னும் முடிவடையவில்லை.
நாயகன் விஷாலே தயாரிப்பாளராகவும் இருப்பதால் வேலைகள் மிக மெதுவாக நடக்கின்றன.
இதனால் இப்படம் இருக்கும்போதே இன்னொரு படத்தைத் தொடங்குகிறார் லிங்குசாமி.
கோலிசோடா2 படத்தில் நடித்த மூன்று நாயகர்களில் ஒருவர் வினோத்.
இவர் லிங்குசாமியின் அண்ணன் மகன். இவரை நாயகனாக வைத்து புதிய படமொன்றைத் தொடங்குகிறார் லிங்குசாமி.
ஜூன் 17 அன்று படப்பிடிப்புடன் தொடங்கும் இந்தப்படத்தை ஜம்போ சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.











