October 17, 2026
சினிமா செய்திகள்

பிரின்ஸ் படத்தைக் கைப்பற்றியது விஜய் தொலைக்காட்சி – தொகை இதுதான்

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பிரின்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்தப் படத்தில் மரியா என்கிற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது.சத்யராஜ் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்தப் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.

இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளீயீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார்.

இந்தப்படத்துக்குப் பெயர் வைக்குமுன்பே படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துவிட்டார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் திரையரங்க வெளியீட்டிற்குப் பின்னான இணைய ஒளிபரப்பு ஆகிய உரிமைகள் பெரிய விலைக்கு விற்றிருக்கின்றனவாம்.

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சியும் இணைய ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனமும் பெற்றிருக்கிறதாம்.

இவ்விரண்டு உரிமைகளுக்கும் சேர்த்து அந்நிறுவனம் கொடுத்திருக்கும் தொகை சுமார் நாற்பத்தைந்து கோடி என்று சொல்லப்படுகிறது.

இதிலேயே இவ்வளவு பெரிய தொகை கிடைத்திருக்கிறது என்பதால் இப்படம் இப்போதே பெரிய இலாபத்தைப் பார்த்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

Related Posts