சிவகார்த்திகேயன் பட முதல்பார்வை மற்றும் ரிலீஸ் தேதி
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது.
அதற்கடுத்து அவர்,இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
நாயகியாகக் கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் நாயகியாக அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
‘ஹீரோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல்பார்வையை இன்று (செப். 2) வெளியிட்டுள்ளது படக்குழு. டிசம்பர் 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது படக்குழு.










