சினிமா செய்திகள் நடிகை

நயன்தாரா வழியில் வரலட்சுமி

சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மைச் சம்பவங்களைத் தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ள படம் ‘வெல்வெட் நகரம். இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில், மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார்.

கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழுப் பின்னணியையும் பற்றித் துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்சன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம் ’ தயாராகியிருக்கிறது.

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தில், முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி.

இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார்.

‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு சண்டை பயிற்சி ‘துப்பறிவாளன்’ தினேஷ்.

படத்தின் படபிடிப்பு சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

இந்தப்படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன். படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது என்கிறார்.

இப்போதைக்கு தமிழ்த்திரையுலகில் நாயகியை மையப்படுத்திய படங்களில் நடிப்பவர் நயன்தாராதான். அவர் வழியில் இப்போது வரலட்சுமிக்குப் படம் அமைந்திருக்கிறது.

Related Posts